வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆன தொழிலதிபர் நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார்

ஜகர்தா:
வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆன தொழிலதிபர் நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார்.

உ.பி.யைச் சேர்ந்த தொழிலதிபர் வினாய் மிட்டல். இவர் 7 வங்கிகளில் ரூ. 40 கோடிக்கு மேல் கடன் பெற்றார். கடனை திரும்பி செலுத்தவில்லை. வங்கிகள் நெருக்கடி தந்ததால் இந்தோனேஷியா தப்பியோடினார்.

இவர் மீது டில்லி, காசியாபாத் கோர்ட்டுகளில் 7 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் இவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இன்டர்போல் அமைப்பு மிட்டலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த மிட்டல் கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டர்.

இந்நிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் வினய் மிட்டலை அந்நாட்டு அதிகாரிகள் அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!