வெளியிடக்கூடாது… திங்கரா கமிஷன் விசாரணை… கோர்ட் உத்தரவு

சண்டிகர்:
வெளியிடக்கூடாது… திங்க்ரா கமிஷனின் விசாரணையை வெளியிடக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா.  இவர் காங்கிரசைச் சேர்ந்தவர்.

இவரது ஆட்சியின் போது, குருகிராம் பகுதியில் நிலம் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க, நீதிபதி, எஸ்.என்.திங்க்ரா தலைமையிலான ஒரு நபர் கமிஷனை மாநில, பா.ஜ., அரசு அமைத்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய கமிஷன், அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த விசாரணை அறிக்கைக்கு தடைக் கோரி, பூபிந்தர் சிங் ஹூடா சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘திங்க்ரா கமிஷனின் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது’ என மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!