வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை… 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு

கொழும்பு:
வெள்ளத்தில் மிதக்கிறது… இலங்கை வெள்ளத்தில் மிதக்கிறது… இதனால் 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இலங்கையில் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்பாணம் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்த ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 40 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களில், 8 ஆயிரத்து 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 212 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!