வெள்ளப்பெருக்கில் பாடசாலைப் பேருந்து சிக்கியதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

ஜோர்தானில் வெள்ளப்பெருக்கில் பாடசாலைப் பேருந்து சிக்கியதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

ஜோர்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள சாக்கடல் எனும் உப்பு நீர் ஏரிக்கு குழந்தைகளுடன், ஆசிரியர்கள் பாடசாலைப் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாடசாலை பேருந்து சிக்கியதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிக்காக இஸ்ரேல் இராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.

Sharing is caring!