வேரோடு சாய்ந்த மரம் திடீரென நிமிர்ந்து நின்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை:
வேரோடு சாய்ந்த மரம் திடீரென்று நிமிர்ந்து நின்றால்… இப்படி ஒரு சம்பவத்தை திருவண்ணாமலை மக்கள் சந்தித்துள்ளனர்.

ஒரு மரம் வேரோடு சாய்ந்துவிட்டது என்றால் கிட்டத்தட்ட அந்த மரம் அவ்வளவுதான். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேரோடு சாய்ந்த ஒரு ஆலமரம் திடீரென நிமிர்ந்து நின்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் என்ற கிராமத்தில் சக்தி வாய்ந்த பச்சையம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயில் உள்ளாது. இந்த கோயிலின் பின் புறத்தில் சுமார் 25 ஆண்டு பழமையான ஆலமரம் இருந்தது.

இந்தபிரமாண்டமான ஆலமராம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது மிகவேகமாக அடித்த காற்றில் வேரோடு சாய்ந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த மரத்தின் கிளைகளை வெட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் திடீரென இந்த மரத்தின் அடிப்பகுதி மட்டும் திடீரென எழுந்துள்ளது. இதனை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பகுதி மக்கள் இந்த மரத்துக்கு சக்தி உள்ளதாக கருதி மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!