வேலைவாய்ப்பு முகவர்நிலையம் நடத்தியவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி நிதி சேகரித்த ஒருவர், 49 கடவுச் சீட்டுக்களுடன் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டார். மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமது வீட்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை சந்தேகநபர் நடத்திவந்துள்ளார்.

குறித்த முகவர் நிலையம் பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!