வேலை நேரத்தில் வகுப்பறையில் மிஸ்சிங்… ஆசிரியர் சஸ்பெண்ட்

விழுப்புரம்:
வேலை நேரத்தில் வகுப்பறையில் இல்லை… சஸ்பெண்ட் செய்தார் கல்வி அதிகாரி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பணி நேரத்தில், வகுப்பறையில் இல்லாத பட்டதாரி ஆசிரியரை, ‘சஸ்பெண்ட்’ செய்து சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி கடந்த 22 ம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் அடுத்த வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது 7ம் வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். விசாரணையில், பட்டதாரி கணித ஆசிரியர் ஏகாம்பரம் பணிக்கு வந்துள்ள போதிலும், வகுப்பிற்கு வராமல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆசிரியர் ஏகாம்பரத்தை, ‘சஸ்பெண்ட்’ செய்து சி.இ.ஓ., உத்தரவிட்டார். மேலும், ஆசிரியரை கவனிக்க தவறிய பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாபனுக்கு விளக்கம் கேட்டு, ‘மெமோ’ வழங்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!