வைகுண்ட ஏகாதசி… திருச்சிக்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி:
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 18ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய வந்து செல்வர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18 உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார். தேர்வு நடப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!