ஸ்கூட்டர் கொள்ளையர்கள் – பரிஸ்

பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்துருளியில் வந்தவர்கள் இந்த நகையினை கொள்ளையிட்டுள்ளார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள place Saint-Placide பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், நகை அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிகளை, ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி உடைத்து, அங்கிருந்த நகைகளை பை ஒன்றுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சில நிமிட இடைவெளியில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு €200,000 க்கள் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. பரிஸ் நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!