ஸ்டாலின் முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்… அமைச்சர் சொல்றார்

சென்னை:
குற்றம் சொல்வதற்கு முன் ஸ்டாலின் தன் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்தது. மாவட்ட செயலர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
அணை பாதுகாப்பு, யு.ஜி.சி. விவகாரத்தில் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். குற்றம் சொல்வதற்கு முன் ஸ்டாலின் தன் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

2010 தி.மு.க ஆட்சியில் ராமலிங்கம் நிறுவனத்திற்கு 4 டெண்டர்கள் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் விஞ்ஞானபூர்வ ஊழல் நடைபெற்றது. தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் ஒத்துழைக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!