ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அமெரிக்கரை சந்தித்த 4 பேருக்கு சம்மன்

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அமெரிக்கரை சந்தித்த 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதாக அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியாலாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவரை சந்தித்து பேசிய பாத்திமா பாபு, ராஜா ,ரீகன், பிரின்ஸ், ஆகியோருக்கும் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். சுற்றுலா வந்த மார்க், போராட்டம் நடந்த 4 இடங்களுக்கு சென்றதாகவும், அவருக்கு 4 பேரும் உதவி செய்ததாக புகார்கள் வந்துள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!