ஸ்பெயினில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்
பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு COVID – 19 தடுப்பு மருந்து மற்றும் உணவு விநியோகத்தை இன்று (11) முன்னெடுக்கவுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
கடும் பனிப்பொழிவினால் பிலோமினா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினின் மத்திய பிராந்தியத்திலுள்ள சுமார் 600 வீதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும் என தெரிவித்துள்ள அந்நாட்டு வானிலை மையம், மறை 10 பாகை செல்சியஸுக்கு வெப்பநிலை குறைவடையும் என எதிர்வுகூறியுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S