ஸ்மார்ட் போனை ஒரு வருடம் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ. 72 லட்சம் பரிசு

ஸ்மார்ட் போனை ஒரு வருடம் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ. 72 லட்சம் பரிசு அளிப்பதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கிறது.

தற்போதைய தலைமுறையினருக்கு ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால் வாழவே முடியாது என்கிற நிலைதான் உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று பரிசுப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

விட்டமின் வாட்டர் என்னும் இந்த நிறுவனம், “ஸ்மார்ட் போன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை டைப் செய்து அதனை டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் கேள்விக்கான பதில்களுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.

வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதிக்குள் இவற்றை பதிவிட வேண்டும். பிறகு எங்கள் நிறுவனத்தின் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு சாதாரண மொபைல்போன் அளிக்கப்ப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒரு வருடத்துக்கு எங்கள் நிறுவனம் அளிக்கும் போனை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

தேவையானால் லேப்டாப், டெஸ்கடாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்றவற்றை பயன்படுத்திகொள்ளலாம். ஆனால் வேறு எந்த ஸ்மார்ட் போனையும் பயன்படுத்தக்கூடாது என்பது போட்டியின் கட்டுப்பாடுகள்.

அதன்படி போட்டியாளர் ஒரு வருடம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை எங்கள் நடத்தும் உண்மை கண்டறியும் சோதனைக்குப்பின்பு பரிசு வழங்கப்படும் ” என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Sharing is caring!