ஸ்மித்தை விமர்சிக்க வேண்டாம்

ஒருவர் கீழே விழுந்த நிலையில் அவரை மீண்டும் உதைப்பது சரியல்ல. ஸ்மித் செய்த தவறுக்காக, விலை கொடுத்துவிட்டார்,’’ என, வெஸ்ட் இண்டீசின் டேரன் சமி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், 29. கடந்த மார்ச் மாதம் நடந்த கேப்டவுன் டெஸ்டில் (எதிர்– தென் ஆப்ரிக்கா) பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், சக வீரர் பான்கிராப்ட், வார்னருடன் சிக்கினார். தற்போது, ஒரு ஆண்டு தடையில் உள்ளார்.

இதற்கிடையே இவர் மது அருந்தும் போட்டோ நியூயார்க் பத்திரிகையில் வெளியானது. இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி கூறியது:

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அதிகமாக விமர்சிக்கின்றனர். விளையாட்டு நட்சத்திரம் என்ற அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், ஒருவர் கீழே விழுந்த நிலையில் அவரை மீண்டும் உதைப்பது சரியல்ல. ஸ்மித் செய்த தவறுக்காக ஐ.பி.எல். தொடர் உட்பட அதிகமான விலை கொடுத்துவிட்டார். இதனால் இவரை மன்னித்து விடுவதுதான் நல்லது. இவருக்கு இனி தொல்லை தர வேண்டாம். இவ்வாறு டேரன் சமி கூறினார்.

Sharing is caring!