ஹமாஸ் அமைப்பினைக் கண்டித்து ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம்

ஹமாஸ் அமைப்பினைக் கண்டித்து ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 87 வாக்குகள் கிடைத்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு வாக்குகள் கிடைக்காமையால் அது தோல்வியடைந்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக 57 நாடுகள் வாக்களித்திருந்ததுடன், 33 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலை நோக்கி ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதைக் கண்டித்தே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!