ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அசாதுதீன் ஓவைசியின் கட்சி

ஐதராபாத்:
தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதேதாகுல் முஸ்லிமின் கட்சி.

தெலுங்கானா மாநில தலைநகர், ஐதராபாதில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, ஏழு தொகுதிகளில், அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப்படும், அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதேதாகுல் முஸ்லிமின் கட்சி வென்றுள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காபந்து முதல்வர் சந்திரசேகர் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியுடன் கூட்டணி அமைத்து, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி போட்டியிட்டது. இதில், ஐதராபாதில் உள்ள எட்டு தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட்டது.

கடந்த, 2009 மற்றும், 2014ல் நடந்த தேர்தல்களைப் போலவே, இந்த முறையும், ஐதராபாதில், ஏழு தொகுதிகளில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., வென்றுள்ளது. ஓவைசியின் சகோதரர், அக்பருதீன் ஓவைசி உட்பட, கடந்த தேர்தலில் வென்ற, ஏழு பேரும் மீண்டும், எம்.எல்.ஏ.,வாகி உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!