ஹிந்தி படங்களில் அப்பா கேரக்டர் என்றால் அலாக்நாத்தான்

பாலிவுட்டின் பிரபல குணசித்ர நடிகர் அலோக்நாத். ஹிந்தி படங்களில் அப்பா கேரக்டர் என்றால் அலாக்நாத்தான் என்ற நிலை இருந்தது. மீ டூ இயக்கத்துக்கு பிறகு அலோக்நாத் மீது எழுத்தாளரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான வின்டா சந்தா பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இதை கடுமையாக மறுத்து வந்த அலோக்நாத், தற்போது வின்டா நந்தா மீது மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வின்டா நந்தாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் வீட்டிலும், வெளியிலும் தலைகாட்ட முடியவில்லை. அவமானத்தில் தவிக்கின்றேன். எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை அவர் என் மீது சுமத்தி உள்ளார். வின்டா நந்தா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், எனக்கு ஒரு ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அலோக்நாத்தின் மனைவி அவருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 1ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

Sharing is caring!