ஹெய்ட்டி நகரில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஹெய்ட்டி நகரில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் கட்டடங்களில் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

நேற்று மாலை நேரத்தில் போட் டி பெய்க்ஸ் நகரின் வட மேற்கே கிட்டத்தட்ட 19 கிலோமீற்றர் ஆழத்தில் இது மையம் கொண்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு கரீபியன் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகிறது.

Sharing is caring!