ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இடைத்தரகருக்கு ஆஜரான வக்கீல் காங்., கட்சியில் இருந்து நீக்கம்

புதுடில்லி:
ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இடைத்தரகர் மைக்கேலுக்காக ஆஜரான காங்., கட்சி வக்கீல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ நிறுவனத்துடன், நம் நாட்டின், வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக நடந்த ஒப்பந்தத்தில், இடைத்தரகராக செயல்பட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டின் மைக்கேல் கைது செய்யப்பட்டான்.

நேற்று அவன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான, காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்த வக்கீல் அல்ஜோ கே.ஜோசப் என்பவரை, கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!