ஹெலிகாப்டர் விபத்தில் சூடான் கவர்னர் பலி

கார்டோம்:
ஹெலிகாப்டர் விபத்தில் சூடான் கவர்னர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூடான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலியானார். ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டின் மாகாண கவர்னர் மிர்ஹாகினி சலேஹ் விவசாய நிலங்களை பார்வையிட தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றார்.

எத்தியோபியா எல்லை அருகே கடாரிப் என்ற இடத்தில் கவர்னர் சென்ற ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் கவர்னர் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!