ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயம்

தலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய பகுதியில் துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சமந்திரா (Samandira) விமான நிலையத்தில் விமானங்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், இன்று காலை சன்கெக்டேப் (Sancaktepe) நகரில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில், விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

UH-1 ரக இராணுவ ஹெலிகொப்டர், இரண்டு தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கு இடையில் வீழ்ந்துள்ளதோடு, வீதி முழுதும் விமானத்தின் சிதைவுகள் சிதறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

துருக்கியின் ஹரியெட் (Hurriyet) பத்திரிகையின் தகவல்படி, கடந்த 20 வருட காலத்தில் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற ஐந்தாவது ஹெலிகொப்டர் விபத்து இதுவாகும்.

Sharing is caring!