ஹெல்மேட் உத்தரவு… போலீசார் நடவடிக்கை தீவிரம்

மதுரை:
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்ற கோர்ட் உத்தரவுபடி தினமும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி டூ வீலரில் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.

மதுரை நகரில் கடந்த ஆக.,24 முதல் வழக்குப்பதிவு செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது ஆக.,24ல் 162 வழக்குகள், 25ல் 219, 26ல் 256, 27ல் 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதாக 24ம் தேதி 383 வழக்குகள், 25, 26ல் தலா 469, 27ல் 456 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை உருவாகி உள்ளது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!