10க்கும் மேற்பட்ட காங்., தலைவர்களுக்கு முதல்வர் ஆசை… பிரதமர் பேச்சு
புதுடில்லி:
மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் தலைவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் முதல்வர் பதவி கனவுகளோடு உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐந்து லோக்சபா தொகுதிகளை சேர்ந்த, பா.ஜ., தொண்டர்களுடன், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம், பிரதமர் மோடி, நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் தலைவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் முதல்வர் பதவி கனவுகளோடு உள்ளனர். அவர்களில் 3 பேர் முதல்வர் பதவி வேட்பாளர்களாக இருக்கின்றனர். அங்கு பா.ஜ., ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என, காங்., விரும்புகிறது.
ஆனால் அந்த கட்சியின் மூன்று முதல்வர் வேட்பாளர்களும், ஒருவரை ஒருவர் தள்ளி விடுவதில் தான் ஆர்வமாக உள்ளனர். பா.ஜ., மீது காங்., பரப்பி வரும் பொய் பிரசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. கேளிக்கையாக நினையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ம.பி., காங்., தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய மூவரையும் பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி– பத்மா மகன், திருச்சி