10ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்… பங்கேற்க வாங்க… மத்திய அரசு அழைக்கிறது

புதுடில்லி:
வாங்க… வாங்க… 10ம் தேதி வாங்க என்று அனைத்து கட்சி கூட்டத்திற்காக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளதை தொடர்ந்து வரும் 10ம் தேதி அனைத்து கடசி கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 11 முதல் ஜன., 8 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பல முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாகவும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விவாதிக்க வரும் 10ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டில்லியில் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!