10 கிலோ எடைகொண்ட lingzhi வகை காளான்
தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள Baoshan நகர மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடைகொண்ட lingzhi வகை காளான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
10 கிலோ எடையும், 105 செ.மீ விட்டமும் கொண்ட இந்த காளானை, மலர்க் கண்காட்சியில் வைப்பதற்காகவே சீனாவின் Gaoligong மலைப்பகுதியிலிருத்து இதன் உரிமையாளர் வாங்கிவந்துள்ளார்.
வழக்கமாக lingzhi வகை காளானை தான் வளர்ப்பதாகவும், ஆனால் இவ்வளவு பெரிய அளவிலான காளானை இதுவரை தான் கண்டதில்லை என்றும் கூறினார்.
lingzhi வகை காளான், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகவே, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S