10 நாட்களுக்கு பின் வந்து என்ன பிரயோஜனம்… மக்கள் அதிருப்தி

சென்னை:
கஜா புயல் பாதித்த பகுதிகளை 10 நாட்களுக்கு பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வர உள்ளார் என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த பத்து நாட்களுக்கு முன் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த சேதத்தை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்ல பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் யாரும் வருகை தராதது அந்த பகுதி மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் வருவார்
என பாஜ தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மத்திய குழுவே பார்வையிட்டு சென்ற பின்னர் பத்து நாட்கள் கழித்து இனிமேல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து என்ன பயன்? என டெல்டா பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!