100 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று… ஆந்திராவை அலற விட்ட பெய்ட்டி புயல்

விஜயவாடா:
100 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று… ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது பெய்ட்டி புயல்.

வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் நேற்று ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மதியம் 12.30 மணி முதல் கரை கடக்க துவங்கியது. புயல் காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கனமழை காரணமாக விஜயவாடாவில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். புயல் கரையை கடந்த போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. கிழக்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, விஜயநகரம் விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் கனமழை மற்றும் புயல் காற்றால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

புயல் கடந்து சென்ற மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 10 ஆயிரம் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விசாகப்பட்டினத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன.

தற்போது பெய்ட்டி புயல் தாக்கியுள்ளது. ஆந்திராவை மூன்று மாதங்களில் தாக்கும் மூன்றாவது புயல் இது. இதற்கு முன் திப்லி மற்றும் கஜா புயல்களும் ஆந்திராவில் சேதத்தை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!