100 பேரை கொன்றேன்… ஆண் நர்சாக பணியாற்றவரின் ஒப்புதல்

ஓல்டன்பர்க்:
தன் பராமரிப்பில் இருந்தவர்களை ஊசி போட்டு மாரடைப்பு ஏற்பட செய்து காப்பாற்ற முயற்சிப்பது என்ற விபரீத விளையாட்டில் 100 பேரை கொன்றுள்ளான் ஆண் நர்ஸாக பணியாற்றியவன்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், தன் பராமரிப்பில் இருந்த, 100 பேரைக் கொன்றதாக, ஆண் நர்சாக பணியாற்றிய நீல்ஸ் ஹோகெல், 41, நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான். ஓல்டன்பர்கில் இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றிய போது அவர்களுக்கு ஊசி போட்டு, மாரடைப்பு ஏற்பட வைத்து, அதில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது என, விபரீத விளையாட்டில் இவன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இவன், 200க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!