11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருது

புதுடில்லி:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்று நடக்க உள்ளது.

நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில், முதல்வர் பழனிசாமிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் முக்கியமான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தலைமையிலான இரு அணிகள் உருவானது. முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக, பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டனர்; பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

சமரசத்துக்குப் பின், இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன; பன்னீர்செல்வம், துணை முதல்வரானார். இதற்கிடையே, ‘கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக ஓட்டளித்த, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 பேரை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ என, தினகரன் ஆதரவாளரான, வெற்றிவேல் வழக்கு தொடர்ந்தார். தி.மு.க., சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், ‘இது தொடர்பாக, சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து, தீர்ப்பளித்தது. இதைஎதிர்த்து, தி.மு.க., கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!