120 கிலோ போதைப்பொருள், போதை மாத்திரைகள் பறிமுதல்

ஜம்மு:
120 கிலோ போதைப் பொருள், 3 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

உத்தம்பூர் மாவட்டத்தில் வாகனத்தில் கடத்தி சென்ற 120 கிலோ போதை பொருள் மற்றும் மூன்று ஆயிரம் போதை மாத்திரைகளை கதுவாவில் போலீசார் கைப்பற்றினர்.

டிக்ரி பகுதியில் வாகனத்தை சோதனை செய்த போலீசார் 120 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட யாவர் அகமது கானே, தாரிக் அகமது மாலிக் கைது செய்யப்பட்டனர். அவர்களது தகவலின்படி மேலும் இருவர் கைதாகினர்.

கதுவா மாவட்டத்தில் நாக்ரி கிராமத்தில் 3,312 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரோமேஷ் லால் கைது செய்யப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!