140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன

மியான்மர் அருகே 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த படிமங்களை ஆராய்ந்ததில் அவைகள் டைனோசரஸ் காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் படிமங்கள் கிடைத்துள்ளது நம்ப முடியாத ஒன்று என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு குட்டிகளில் படிமங்கள் கிரிட்டாசியஸ் காலத்தை சார்ந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு ஜியாவோபிஸ் மியான்மரிசெஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 2ம் கட்ட புதைப்படிவ ஆராய்ச்சியில் இதுவரை கிடைப்பட்ட பாம்பு படிமங்களை காட்டிலும் மிகப்பெரிய பாம்பின் படிமம் கிடைத்துள்ளது. இதுவும் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் இனத்தை சார்ந்தது.

இவ்வளவு ஆண்டுகளாக பாம்புகள் எப்படி அழியாமல் உறைந்திருக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு விஞ்ஞானிகள், விலங்குகள் மரத்தின் செதில்கள், சந்துகள் மற்றும் பட்டைகளிடையே சென்று பதுங்கி கொள்ளும். அதன் காரணமாக இத்தகைய பாம்பு இனங்களும் அழையாமல் படிமங்களாக உள்ளன என்று விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் புதைப்படிவங்களில் பசைப்போன்ற பொருள் இருப்பதால் அவைகள் பாம்புகளின் வடிவத்தை அச்சடிப்பது போன்று இவ்வளவு நாள்களாக பாதுகாத்து வந்துள்ளன என்று ஆல்பெர்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கால்ட்வெல் கூறியுள்ளார்.

புதைப்படிவமான மரத்தில் உறைந்திருக்கும் ரெசின் காணப்படுகிறது. இவைகள் தான் முந்தைய காலத்தில் வாழ்ந்துள்ள உயிரினங்களின் படிமங்களை இவ்வளவு காலத்திற்கு பாதுகாத்து வந்துள்ளன. இதுவரை கிடைக்கப்பெற்ற புதைப்படிவங்களில் பாம்புகள், பல்லிகள், டைனோசர், குதிரைகள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை படிநிலைகள் ஆராயப்பட்டு வருகின்றன.

தற்போது கண்டறியப்படுள்ள மிகவும் பழமை வாய்ந்த 140 முதல் 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகள் இங்கிலாந்தில் இருந்து வந்திருக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இயோபிஸ் எனப்படும் பாம்பு படிமங்கள் மிகவும் சிறியவையாகவும், சதுப்பு நிலப்பகுதிகளில் வாழ்ந்திருக்க கூடியதாகவும் உள்ளது.

இத்தாலியில் உள்ள ஆல்ப்ஸ் பாறைகளில் கண்டறியப்பட்ட சிறிய வகை பல்லிகள் இந்த ஆண்டின் முதலில் தொடங்கப்பட்ட ஆராய்ச்சியை உறுதிப்படுத்தின. மெகாசிரெல்லா வாட்ச்லேரி 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டிரியாச்சிக் காலத்தை சேர்ந்த பல்லிகள் என்று தெரிய வந்துள்ளது. கிடைக்கப்பட்டுள்ள படிமங்களின் மூலம் முந்தய காலத்தில் வாழ்ந்த பல்லிகள் மிகப்பெரியதாக இருந்துள்ளன.

சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் படிமங்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த பல்லிகளை குறிக்கின்றன. கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள டன்சானியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நியாசாரசஸ் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை நீளம் கொண்டதாக உள்ளது. இது ஆரம்ப காலக்கட்டத்தில் வாந்திருந்த டைனோசர்களின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கிறது. இவைகள் கிட்டத்தட்ட 165மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது.

Sharing is caring!