15 ஆயிரம் பிரசவம் செய்த பாட்டி நரசம்மா காலமானார்

பெங்களூரு:
மருத்துவ வசதியில்லாத கிராமத்தில் எளிய முறையில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு எளிய முறையில் பிரசவம் பார்த்த பாட்டி நரசம்மா (98) காலமானார்.

கர்நாடகா மாநிலம் கிருஷ்ணபுரா, பவகாடா கிராமத்தைச் சேர்ந்தவர் நரசம்மா. இவர் தனது சொந்த கிராமத்தில் மருத்துவ வசதியில்லாத நிலையில் தவித்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவங்களை எளியமுறையில் பார்த்து வந்துள்ளார்.

70 ஆண்டுகளாக இவர் ஆற்றிய அரும்சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டில் ‘இந்தியாவின் சிறந்த குடிமகள்’ விருதும் பின்னர் பத்மஸ்ரீ விருதும் நரசம்மாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பெங்களூரு கெங்கேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நரசம்மா காலமானார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!