15 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு… மிசோராம் தேர்தலில்…

அய்ஸ்வால்:
15 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது… கிடைத்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெறும் 15 பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி சார்பிலும் சுமார் 201 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் அட்டவணையின் படி ஆண்வாக்காளர்கள் 3,74,496 பேரும் , 3,93,685 பெண் வாக்காளரும் உள்ளனர்.

இந்நிலையில் போட்டியிட உள்ள 201 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15 ஆக மட்டுமே உள்ளது. அதிகபட்சமாக பா.ஜ., சார்பில் 6 பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. தொடர்ந்து ஜோரம் தார் கட்சியில் 5 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பெண்களுக்கும், தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு பெண்ணிற்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வாய்ப்பு குறித்து பா., மாநில தலைவர் ஜே.வி.ஹ_லூ கூறுகையில் மாநில பெண்கள் இது வரையில் அரசியலில் அக்கறை காட்டாமல் இருந்து வந்தனர். தற்போது அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர் என்றார்.

மிசோரமில் உள்ள மிஸ்சோ தேசிய முன்னணி (எம்.என்.எப்) கட்சி தலைவர் சோரம்பந்தா கூறுகையில் நாங்கள் 1987- பெண் வேட்பாளர்களை நிறுத்தினோம். மேலும் அமைச்சர்களாக நியமித்தோம். ஆனால் அடுத்த வந்த தேர்தல்களில் பொருத்தமான பெண் வேட்பாளர்கள் அமைய பெற வில்லை என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!