16 முதல் 60 வயது வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்களை யுக்ரேன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது

இராணுவ சட்டம் அமுலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்களை யுக்ரேன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

“மனிதநேய அடிப்படைகளில்” மட்டும், அதாவது இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எல்லையை பகிர்ந்துள்ள 10 பிராந்தியங்களில் டிசம்பர் 26 வரை ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, தனது மூன்று யுக்ரேனிய கடற்படை கப்பல்கள் மற்றும் 23 பணியாளர்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து யுக்ரேன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் எல்லை பகுதியில் புதிய ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Sharing is caring!