17 நாட்களுக்கு பின்தான் கமல் களம் இறங்கினார்… பாஜ தேசிய செயலர் குற்றச்சாட்டு

சென்னை:
கமல், 17 நாட்களுக்கு பிறகு தான் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்று பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ஆர்கே நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை. புயல் தாக்கிய 6 மணி நேரத்திற்கு பின் பா.ஜ., நிர்வாகிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். கமல், 17 நாட்களுக்கு பிறகு தான் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மத்திய அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவரது உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!