18 மாத குழந்தையை அறைக்குள் பூட்டிவிட்டு – விருந்துக்குச் சென்ற தந்தை!

நபர் ஒருவர் அவரின் 18 மாத பெண் குழந்தையை வீட்டின் அறை ஒன்றுக்குள் வைத்து பூட்டிவிட்டு, விருந்துக்குச் சென்றுள்ளார். குறித்த குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு, Saint-Brieuc (Côtes-d’Armor) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு தாண்டி 2.30 மணி அளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கதவினை உடைத்து உள்ளே இருந்த 18 மாத பெண் குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தது.

பின்னர், சில மணி நேரம் கழித்து விருந்து முடித்து வீடு திரும்பிய தந்தை, வீட்டின் கதவு உடைபட்டிருப்பதையும், குழந்தையை காணவில்லை எனவும் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். நிறைந்த மது போதையில் மகிழுந்து ஓட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்கு வந்த நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Sharing is caring!