2 நாட்கள் வெயில் அதிகரிக்கும்… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:
இரண்டு நாள் வெயில் வாட்டும்… வாட்டும்… என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு, பரவலாக வெயிலின் அளவு அதிகரிக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழை படிப்படியாக நகர்ந்து, வட மாநிலங்களை மையம் கொண்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு பகுதியும், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்துள்ளது.

இதனால், தென் மாநிலங்களுக்கான மழை வாய்ப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில், ‘அடுத்த இரண்டு நாட்களை பொறுத்தவரை, மழை குறைந்து, வெயிலின் அளவு சற்று அதிகரிக்கும். பல மாவட்டங்களில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக, திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது’. சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்; மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!