2 முன்னாள் மாணவர்கள் சிக்கினர்… வினாத்தாள் லீக் விஷயத்தில்!

சென்னை:
சிக்கினர்… சிக்கினர்… 2 முன்னாள் மாணவர்கள் சிக்கி உள்ளனர்.

அண்ணா பல்கலை தேர்வு வினாத்தாள் லீக் ஆனது குறித்து தனியார் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரி
கிருஷ்ணனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

டிசம்பர் 3 ல் அண்ணா பல்கலை., கணித தேர்வு நடந்தது. இதில் வினாத்தாள் லீக் ஆனது குறித்து பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் வெங்கடேஷன் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லுாரிகளி்ல் 2016ல் படித்த மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் வினாத்தாளை லீக் செய்தது தெரிய வந்தது.

தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு ஊழியர் மூலம் வினாத்தாளை பெற்று, பகிர்ந்துள்ளதால் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!