200 பசுக்கள் பரிசு… ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி அளிக்கிறார்

புதுடில்லி:
இது இந்தியாவின் பரிசு… பரிசு… என்று ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் பரிசாக கொடுக்கப்பட உள்ளது.

ருவாண்டா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பரிசாக அந்நாட்டுக்கு 200 பசுக்களை பரிசாக வழங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

5 நாள் பயணமாக ஆப்ரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ருவாண்டா சென்றடைந்தார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றார்.

ருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ருவாண்டா அரசின் ‘கிரிங்கா’ எனும் திட்டத்தை மோடி துவக்கி வைக்கிறார். ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ எனும் இத்திட்டத்திற்காக, இந்தியாவின் சார்பில் 200 பசுக்களை பரிசாக பிரதமர் வழங்குகிறார். ருவாண்டாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி, இன்று உகாண்டா செல்ல உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!