24 மணிநேரம் தான் டைம்… வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு

ரியாத்:
வெளியேறணும்… 24 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்று கனடா நாட்டு தூதருக்கு சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி, கனடா நாட்டு தூதர், 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்நாட்டிற்கான தனது தூதரையும் திரும்ப பெற்று கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதியில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இது கவலை அளிப்பதாகவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கனடா கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுதி, கனடா தூதரை உடன் நாட்டை விட்டு வெளியே உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கனடா நாட்டிற்கான தனது தூதரையும் திரும்ப பெற்று கொள்வதாகவும் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான புது ஒப்பந்தங்கள், முதலீடுகள் ஆகியவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!