3வது… தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் களம் இறங்கினார்

புவனேஷ்வர்:
3வது அணி அமைக்க சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். இதற்கான முயற்சிகளில் அவர் இறங்கி உள்ளார்.

லோக்சபா தேர்தலில் 3வது அணி அமைக்க திட்டமிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார்.

பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரசேகரராவ், புவனேஷ்வரில் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், பாஜ காங்.கிற்கு மாற்றாக வலிமையான 3வது அணி அமைக்க மாநில கட்சிகளின் கூட்டணி அவசியம் தேவை என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, அகிலேஷ் ஆகியோரையும் சந்திக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!