3 ஆண்டுகளில் ஏற்பட்ட சண்டைகளில் 400 வீரர்கள் பலி

புதுடில்லி:
400 வீரர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட சண்டைகளில் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், எல்லையில் நடந்த சண்டைகளில், துணை ராணுவ படைகளைச் சேர்ந்த, 400 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் டில்லியில் கூறியதாவது: கடந்த, 2015 – 17ம் ஆண்டுகளில், இந்தியா – பாக்., எல்லையில், பயங்கரவாதிகள் ஊடுருவல், பாக்., தரப்பு துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை எதிர்கொள்ள, துணை ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், எல்லையில் நடந்த சண்டைகளில், 400 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 167 வீரர்கள் இந்த சண்டைகளில் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!