“3 சி” தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும்… மத்திய அமைச்சர் சொல்றார்

புதுடில்லி:
அரசியலில் 3 சி தான் ஆதிக்கம் செலுத்தும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அரசியலில் பணம், ஜாதி, கிரிமினல்கள் (cash, caste, criminal) ஆகியவையே ஆதிக்கம் செலுத்தும் என மத்திய அமைச்சர் கட்காரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அரசியலில் அனைத்தையும் சீரியசாக எடுக்கக்கூடாது. ராஜஸ்தானில் அரசியல் மாற்றம் வழக்கமானது தான். அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும். அங்கு பா.ஜ., மற்றும் காங்கிரசின் ஓட்டு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை.

அரசியலில் 3 சி(3 C) தான் ஆதிக்கம் செலுத்தும். அந்த ‘சி’யானது பணம்(cash) ஜாதி (caste) கிரிமினல் (criminal) ஆகியவை. 5 மாநில தேர்தல் முடிவுகளை 2019 தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு மட்டத்திலும் திட்டங்கள் மாறும். ம.பி., சத்தீஸ்கரில் 15 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சி நடந்தது.

அங்கு ஏற்பட்ட தோல்விக்கு மாநில அரசின் மீதான அதிருப்தியே காரணம். தோல்வியடைந்த பகுதிகளில் மீண்டும் வெற்றி பெற பா.ஜ., கடுமையாக உழைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!