3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்:
3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரின் பெயர் அறிவிப்பு கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக பரிசு அறிவிக்கப்பட்டது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S