4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை

சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேற்படி சிறுமி இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவரது தந்தை சிறுமி யக்சின் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து யயன் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், பெரிய பெண்ணாகியதன் பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள்.

இதனால் அவளை திருமணம் செய்தேன் என மிக்க கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பார்போரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியது.

Sharing is caring!