4 வருட சிறைத் தண்டனை முடிந்து விரைவில் சிறையிலிருந்து வெளியில் வருகிறார் சசிகலா.!!

இந்தியாவில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் தண்டனை காலம் எதிர்வரும் 2021-ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆகவும் வாய்ப்புள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27அம் திகதி சசிகலா விடுதலை ஆகிறார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லையெனவும், ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா செலுத்தியாக வேண்டும். அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!