40 இலட்சம் ரூபா….டைட்டானிக் பயணியின் கைக்கடிகாரம் ஏலத்தில்

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவரின் கைக்கடிகாரம் 57,500 டாலருக்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து 1921ம் வருடம் மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் டைட்டானிக் பல்லாயிரக்கான பயணிகளுடன்  புறப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு சென்று சேரவேண்டிய கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து  மூழ்கியது.

அதில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சினாய் கண்டோ என்ற பயணி உயிரிழக்கும்போது அவருக்கு 34 வயது. அட்லாண்டிக் கடலிலிருந்து  கண்டோவின் உடல் மீட்டெடுக்கப்பட்டது. அவரது உடல் நியூயார்க்கில் புதைக்கப்பட்டது. அவரது  பாக்கெட் கடிகாரம் அவர் மனைவி  மரியம் மற்றும் சினாய் கண்டோவின் வம்சாவளி மூலம் நேற்று ஏலம் விடப்பட்டது. பழம்பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் இந்த கைக்கடிகாரத்தை 57,500 டாலருக்கு வாங்கியுள்ளதாக புராதனப் பொருட்களை ஏலம் விடும் அமைப்பு  தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 40 லட்சம் ரூபாய் ஆகும்.

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஹாலிவுட்டில் 1997ல் எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்தது. அதன்பிறகு டைட்டானிக் தொடர்பான பொருட்கள் மீதான மோகம் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

Sharing is caring!