400 ஆண்டுகள் பழைமையான, கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

போர்த்துக்கல் கடற்கரைப் பகுதியில், 400 ஆண்டுகள் பழைமையான, கப்பலின் உடைந்த பாகங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கப்பல் 1575 ஆம் ஆண்டிற்கும் 1625 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியிருப்பதாக தொல்பொருள் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து மிளகு, கராம்பு உள்ளிட்ட மசாலா மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வழியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதனை “இந்த தசாப்தத்தின் கண்டுபிடிப்பு” என தொல்பொருள் அறிஞர் ஒருவர் வர்ணித்துள்ளார்.

Sharing is caring!