4400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரமீடு… ஆராய்ச்சியாளர்கள் தகவல்

கெய்ரோ:
கெய்ரோவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பிரமீடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

4,400 ஆண்டு பழமையான பிரமீடை எகிப்து தலைநகர் கெய்ரோவில் வெளிப்படுத்தியுள்ளனர். மன்னர் நெபெரிர்கரே ககய் காலத்தில் இந்த பிரமீடில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அங்கு, வரைபடங்களால் ஆன எழுத்தோவியங்களும், சிற்பங்களும் உள்ளன. 5 சுரங்க வாயிற்குழி கதவுகளில் ஒன்று கூட இதுவரை திறக்கப்பட்டு களவாடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீலிடப்படாத ஒன்றை மட்டும் திறந்தபோது குப்பைகள் மட்டுமே இருந்ததாகவும், எஞ்சியுள்ளவற்றில் பதப்படுத்தப்பட்ட உடல், இறந்தவர் பயன்படுத்திய ஆடை, அணிகலன் போன்றவை இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!