5 ஜி செல்போன் சேவை… பறவைகள் இறந்ததாக எழுந்த தகவலால் பரபரப்பு

நெதர்லாந்து:
5 ஜி செல்போன் சேவை சோதனையால் பறவைகள் இறந்ததாக எழுந்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வருவது போல் நெதர்லாந்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5ஜி செல்போன் சேவை சோதனையால் அவை  இறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது 4ஜி செல்போன் செயல்பாட்டில் உள்ளது. இதையடுத்து 5ஜி செல்போன் சேவைக்கு சில நாடுகள் மாறி வருகின்றன. இதற்கான சோதனைகளில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த 5ஜி சேவைகளால் வேகம், துல்லிய வசதிகள் கிடைக்கின்றன. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள தி ஹேக் நகரில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஹூகைன்ஸ் பூங்காவில் 300க்கும் மேற்பட்ட  பறவைகள் இறந்து விழுந்தன.

அப்போது சில பறவைகள் தண்ணீருக்குள் தலையை விட்டுக் கொண்டன. பின்னர்தான் அப்பகுதியில் 5ஜி சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதன் கதிர்வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பறவைகள் இறந்ததாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!